DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம்...

Chief Minister M.K. Stalin addressed the DMK Platinum Jubilee Mupperum Vizha in Vellore, recalling 75 years of ideological resilience and democratic struggles.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத பெருநிகழ்வு!

திரும்பிப் பார்த்தால், எத்தனையோ நெருக்கடிகள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், மிரட்டல்கள், பெருவெற்றிகள், படுதோல்விகள்... எனினும் முக்கால் நூற்றாண்டு ஆகியும், கழகத்தின் வலிமை குன்றவில்லை! கழகத்தோடு அக்காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கங்கள் எல்லாம் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன, கரைந்துபோய் விட்டன. எதிர்நீச்சல் போட்டு இன்றளவும் கொண்ட கொள்கைக்காக நெஞ்சு நிமிர்த்தி நிற்பது தி.மு.கழகம் மட்டுமே!

இந்திய நிலப்பரப்பில், மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்தும் இன்று தமிழ்நாடு கொண்டிருக்கும் தனித்துவமான பண்பு என்பது தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் முதலிய நம் தலைவர்களின் தொடர் பரப்புரையால்தான் சாத்தியமானது!

முழுக்க முழுக்க ஜனநாயக வழிமுறையால், பகுத்தறிவுச் செயல்பாடுகளால் இதனைச் செய்து காட்டியுள்ளோம் என்பதுதான் உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாமல் நம் திராவிட இயக்கத்துக்கே உரிய பெருமை.

இன்று, மீண்டும் நம் முன் ஒரு வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது! கழகத்தின் பவளவிழா ஆண்டில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, #INDIA கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாகப் பாடுபட வேண்டும் என்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கழக #முப்பெரும்விழா-வில் கேட்டுக் கொண்டேன்! #நாற்பதும்நமதே_நாடும்நமதே! #DMK75

பவளவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் கழகம். சாமானிய இளைஞர் படையின் தளபதியான அண்ணா தலைமையில் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தெற்காசியாவின் 20-ஆம்...
Editorial context

DMK President and Chief Minister M.K. Stalin delivered an inspiring presidential address at the DMK Platinum Jubilee Mupperum Vizha in Vellore, commemorating the party's historic entry into its 75th year. Stalin recalled how Perarignar Anna led an army of ordinary youth to state power, creating an unforgettable milestone in 20th-century South Asian political history that established people's democracy over hereditary privilege.

Reflecting on three-quarters of a century filled with intense agitations, imprisonment, political conspiracies, and electoral triumphs, Stalin noted that while contemporary political organizations vanished into historical oblivion, the DMK continues to stand tall and unshakeable. He pointed out that Tamil Nadu's unique rationalist consciousness and social development were forged through the continuous ideological campaigns of Periyar, Anna, and Kalaignar, achieving radical social transformation purely through peaceful democratic methods.

Stalin declared that a monumental historical duty now awaits the movement in its milestone jubilee year: defeating the reactionary Union regime in the 2024 parliamentary elections through the INDIA alliance. Raising the slogan 'Forty is Ours, the Nation is Ours,' Stalin rallied party cadres to ensure total democratic victory to protect India's federalism, secularism, and constitutional democracy.

110887 Views 127 Replies 1210 Reposts
#political#party-elections#mupperum-vizha#dmk-platinum-jubilee#vellore-conference
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41