பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' #MSSwaminathan அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!...
Chief Minister M.K. Stalin honored Bharat Ratna M.S. Swaminathan on his birth centenary, highlighting named agricultural institutions and state academic awards.
M.K.Stalin@mkstalinOriginal post
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' #MSSwaminathan அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!
தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்களுடன் இணைந்து, அங்குள்ள #JRDTata சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசும், போரூர் #WetlandPark, தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது பெயரைச் சூட்டியுள்ளதோடு,
பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு #MS_Swaminathan அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.
#ClimateChange உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!
தந்தையின் பணியையும் - புகழையும் போற்றும் திருமிகு. சவுமியா சுவாமிநாதன் அவர்களது பணி சிறக்கவும் வாழ்த்துகள்!

Paying rich tribute to pioneering agricultural scientist Bharat Ratna Dr. M.S. Swaminathan on his birth centenary, Tamil Nadu Chief Minister M.K. Stalin celebrated his monumental contributions in fathering India's Green Revolution and securing national food sovereignty. Stalin recalled that former Chief Minister M. Karunanidhi shared an affectionate bond with Dr. Swaminathan, allocating state land to establish the M.S. Swaminathan Research Foundation and inaugurating its JRD Tata Ecotechnology Centre alongside former President K.R. Narayanan to advance sustainable farming innovations.
The Chief Minister highlighted that the Dravidian Model administration has perpetuated Dr. Swaminathan's legacy by naming the Porur Wetland Park and the Eachangkottai Agricultural College in Thanjavur in his honor, while establishing an annual state academic award for students achieving top ranks in Plant Breeding and Genetics. Stalin emphasized that Dr. Swaminathan was a great visionary who foresaw emerging challenges like climate change, ecological degradation, and water scarcity decades before they became acute global crises.
Stalin urged contemporary agricultural researchers and young students to emulate Dr. Swaminathan's humanitarian ethos and scientific dedication. He extended warm felicitations to Dr. Soumya Swaminathan for advancing her father's public health and ecological mission.